விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Thursday, November 5, 2015

தாம்பத்யத்தில் உற்சாகமுடன் செயல்பட - Happy Sexual Life




 happy sex life counseling clinic in chennai


உற்சாகமான தாம்பத்தியத்திற்கு 
சுவாசத்தில் நுழையும் சுத்தமான காற்று நமது மனதையும், உடலை உறசாகப்படுத்தும். அது போல தாம்பத்யத்தில் உற்சாகமுடன் செயல்பட மூன்று முக்கிய வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்று தெரிவிக்கின்றனர் உளவியலாளர்கள்.


முத்தான மூன்று வழிகள் :
1. பார்வையாளராக மட்டுமே இருப்பதை தவிர்க்க வேண்டும்


2. உறவுகளுக்கிடையேயான தொடர்பை அதிகரிக்க வேண்டும்

3. ஒருவருக்கொருவர் தவறாக புரிந்து கொள்வதை விடவேண்டும்.


பார்வையாளராக இருக்க வேண்டாம் :
  • தாம்பத்தியத்தில் இருவரின் பங்களிப்புமே முக்கியமானது. ஒருவர் பார்வையாளராக இருந்து மற்றொருவர் மட்டுமே செயல்புரிந்தால் அது ஓரங்க நாடகம் போல ஆகிவிடும். இருவருமே இணைந்து செயல்புரிவதில் தான் சுவாரஸ்யமே உள்ளது. எனவே பார்வையாளராக மட்டுமே இல்லாது பங்களிப்பாளராக இருப்பதும் முக்கியம்.


ஸபரிசங்கள் உணர்த்தும் :

  • தகவல் தொடர்பு என்பது தாம்பத்தியத்தில் மிகவும் முக்கியமானது. வார்த்தையாகவோ, தொடுகை யாகவோ எப்படியாகிலும் உங்கள் துணையுடன் நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டும். எது நன்றாக இருக்கிறது என்பதை உணர்த்துவதில்தான் வெற்றியின் ரகசியம் இருக்கிறது. ஆயிரம் பேச்சு உணர்த்துவதை ஒரு ஸ்பரிசம் புரிய வைத்துவிடும் என்பார்கள். எனவே தாம்பத்தியத்தின்போது உங்கள் வாழ்க்கைத் துணைக்கு நீங்கள் என்ன விரும்புகிறீர் என்பதை புரிய வைக்க வேண்டும். பிறகு பாருங்கள்! உங்களுக்கு தேவையானவை தானாகவே கிடைக்கும்.
  • தாம்பத்யத்தில் தொடுகையின் பங்கு முக்கிய மானது. தொடத் தொட மலரும் பூக்களைப் போல உங்களின் வாழ்க்கைத் துணை உங்களின் பங்க ளிப்பை கண்டு உற்சாகமடைவார் என்பது நிச்சயம்.
  • அதற்காக ஓவர் ஆக்டிங் தேவையில்லை ஏனெ னில் அது முழுவதையும் சொதப்பி விடும். ஒருவருக் கொருவர் விட்டுக் கொடுத்து மகிழ்விப்பதில் இருவரின் பங்களிப்பு சரிசமமாக இருக்க வேண்டும்.


புரிதல் தேவை :
  • தாம்பத்தியத்தைப் பொறுத்தவரை யார் பெரியவர் என்ற ஈகோ தேவை யற்றது. சரியான புரிந்து கொள்ளும் தன்மையுடன் அணுகினாலே அன் றைக்கு வீட்டில் அமர்க்களம்தான். அதை விடுத்து தன்னுடைய செயல்பாடுதான் சரியானது என்றும் தான் சொல்வதைக் கேட்டால் தான் சரியாக இருக்கும் என்று கூறினாலே அங்கே சிக்கல் எட்டிப்பார்க்க ஆரம்பிக்கும்.
  • அந்த சமயத்தில் கட்டளையிடு வதை விட கவனத்தோடு பிரச்சினையை தீர்க்க முயல்வதே சரியானது. 


இந்த  மூன்று முத்தான ஆலோசனைகளை பின்பற்றி பாருங்கள்! அப்புறம் உங்கள் வீடடில் அன்பு மழைதான்  



==--==

Please Contact for Appointment

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

பிரபல பதிவுகள்