விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Thursday, October 29, 2015

கணவர் உங்களோடு இருப்பது அவசியம் - Family Psychological Counseling in Chennai,



 family problems psychological counseling center in velachery, chennai, tamil nadu


Question:  என் வயது 39. Civil Engineer. இரண்டு குழந்தைகளின் தாய். என் கணவர் இதே துறையில் இன்னொரு மாநிலத்தில் பணிபுரிகிறார். நான் பணிபுரியும்  நிறுவனத்தின் புராஜக்ட் மேனேஜராக இருப்பவர், என்னைவிடவும் வயது குறைந்தவர். திருமணமாகாதவர். அவரை நான் காதலித்தேன். அவரோடு என் உறவை வலுப்படுத்திக்கொள்ள நான் சில தவறான வழிமுறைகளை கையாண்டேன். அதை எல்லாம் அறிந்து கொண்ட பின்பும் அவர் மிகுந்த பக்குவத்துடன், `தான் அந்த  மாதிரியான உறவுக்கு ஏங்கும் ஆள் இல்லை. உங்களுக்கும், கணவருக்கும் உறவு நிலை சரியில்லாதது போல் தெரிகிறது. அதை மேம்படுத்துங்கள். என்னை உங்கள் சகோதரன் போல் பாவித்து இனி பழகுங்கள்’ என்று கூறிவிட்டார். நான் முதலில் தடு மாறிப் போனாலும், பின்பு தியானம் மூலம் என் மனதை பக்குவப்படுத்தி, அவரை சகோதரனாக ஏற்றுக் கொண்டேன். அவரை நான் ஒரு தலையாக காதலித்துக் கொண்டிருந்த’ கால கட்டத்தில் என் கணவரை அலட்சியப்படுத்தி புறக்கணித்துவிட்டேன். இனி என் கணவரோடு உறவினை மேம்படுத்தி, மகிழ்ச்சியாக வாழ வழி சொல்லுங்கள்?


Answer: உங்கள் எண்ணங்களையும், நடத்தையையும் செம்மைப்படுத்திக் கொண்டது மகிழ்ச்சிக்குரியது. உங்களிடம் நல்ல மாற்றத்தை ஏற்படுத்திய அந்த சகோதரர் பாராட்டுக் குரியவர். முதலில், `என் சிந்தனையில் இனி இந்த மாதிரியான எண்ணம் எதற்கும் இடம் கொடுக்கமாட்டேன். கணவரின் நம்பிக்கைக்குரியவளாக வாழ்ந்து காட்டுவேன்’ என்று உறுதி எடுத்துக்கொள்ளுங்கள். அடுத்து கணவரின் அன்பைப் பெறுவதற்கான செயல்களில் ஈடுபடுங்கள். `நாம் இருவரும் வெவ்வேறு இடங்களில் வேலை பார்ப்பதால் நமது குழந்தைகளுக்கு நமது பாசம் கிடைப்பதில் நெருக்கடி ஏற்படுகிறது. குழந்தைகளுக்காக நாம் இருவரும் அதிக நேரத்தை ஒன்றாக செலவிட முன்வர வேண்டும்’ என்ற அன்பு கோரிக்கையை கணவரிடம் வைத்துவிட்டு, குழந்தைகளோடு அவரைத் தேடிச்சென்று உங்கள் அன்பையும், எதிர்பார்ப்பையும் முழுமையாக அவரிடம் வெளிப் படுத்துங்கள். அவருக்கு  பிடித்தமானவைகள் என்னவென்று உங்களுக்கு தெரியும். அதை அவருக்காக நிறைவேற்ற தனிமையான நேரத்தை இருவருக்காகவும் உருவாக்குங்கள். உங்களிடம் இருக்கும் குறைகளாக அவர் கருதுவதையும், நீங்கள் கருதுவதையும்  ஒருசேரக்கண்டறிந்து அவைகளை களையுங்கள். மனம் விட்டுப் பேசுங்கள். உங்கள் நிம்மதிக்கும், குழந்தைகளின் எதிர்காலத்திற்கும் கணவர் உங்களோடு இருப்பது அவசியம் என்பதை உணர்த்தி, யாராவது ஒருவர் வேலை விஷ யத்தில் விட்டுக்கொடுத்து ஒரே இடத்தில் வேலை பார்க்கும் வாய்ப்பினை உருவாக்க முயற்சியுங்கள். உடல் ரீதியாகவோ, செக்ஸ் ரீதியாகவோ, அன்பு ரீதியாகவோ உங்கள் கணவரிடம் நீங்கள் குறையாக எதைக் கருதினாலும் அவை அனைத்துக்கும் தீர்வு இருக்கிறது.






For more details & Consultation Feel free to contact us.
Vivekanantha Clinic Consultation Champers at
Chennai:- 9786901830
Panruti:- 9443054168
Pondicherry:- 9865212055 (Camp)

For appointment please Call us or Mail Us


For appointment: SMS your Name -Age – Mobile Number - Problem in Single word - date and day - Place of appointment (Eg: Rajini – 30 - 99xxxxxxx0 – Family Counseling, Couple Counseling, Family issues,  – 21st Oct, Sunday - Chennai ), You will receive Appointment details through SMS,





==--==

Please Contact for Appointment

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

பிரபல பதிவுகள்