விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Thursday, July 23, 2015

அளவுக்கு மிஞ்சினால் செக்சும் ஆபத்துதான் - Hyper Sexual Activities is Harm to Health


 sex addiction treatment clinic in chennai, செக்ஸ் அடிமை சிகிச்சை மருத்துவமனை சென்னை,


அதிகமான உடலுறவு மரணத்தை ஏற்படுத்தலாம்????

செக்ஸ் என்பது ஆரோக்கியத்தோடு தொடர்புடையது. அதே செக்ஸ்தான் உயிருக்கும் ஆபத்தாகிவிடுகிறது. உச்சபட்ச ஆர்கஸம் திடீர் மரணங்களைக் கூட ஏற்படுத்துமாம். எந்த மாதிரியான சமயங்களில் செக்ஸ் மரணங்கள் ஏற்படுகின்றன என்று பட்டியலிட்டுள்ளனர் நிபுணர்கள்.

ஆணுக்கும் பெண்ணுக்கும் அதிக வயது வித்தியாசம் இருக்கும் பட்சத்தில் அவர்கள் உறவுகொள்ளும் போது அதுவே ஆபத்தாகி திடீர் மரணங்கள் ஏற்படும். இதயத்துடிப்பு அதிகரிக்குமாம், ரத்த அழுத்தம் கூடுவதோடு ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்பட்டு திடீர் மரணங்கள் சம்பவிக்கும் என்கின்றனர்.

தாம்பத்ய உறவுக்கு முன்னதாக தம்பதியர் மது அருந்துவதும், புகைப்பதும் கூட ஆபத்தானது என்கின்றனர் நிபுணர்கள். அதேவேகத்தில் செக்ஸில் ஈடுபடுவது இதயம் தொடர்பான நோய்களை ஏற்படுத்துமாம். எனவே தேவையற்ற உற்சாக பானங்களை அருந்துவதை தவிர்க்கவும்.

ஒரே நாளில் அதிக முறை ஆர்கஸம் ஏற்படுவதும் ஆபத்து. இது மனரீதியான ஒரு அழுத்தத்தையும், மன உளைச்சளையும் ஏற்படுத்தும் ஓவர் செக்ஸ் மரணத்தையும் ஏற்படுத்தும்.

போதை பொருட்களை எடுத்துக்கொண்டு அதேவேகத்தில் உறவுக்கு துணையை கட்டாயப்படுத்துவது ஆபத்தாகிவிடும். போதையின் வேகத்தில் உறவின் போது வன்முறையான செயல்களில் ஈடுபடுவதும் திடீர் மரணம் சம்பவிக்க காரணமாகிறது.

ஹைபர்டென்சன், இதயம் தொடர்பான நோய்களை உடையவர்கள் அதிகமான அளவில் உறவில் ஈடுபட நேர்ந்தால் ரத்தம் வேகமாக பாய்ந்து உயிருக்கு ஆபத்தாகிவிடும்.

அதிக தூரம் பயணம் செய்துவிட்டு அதே வேகத்தோடு செக்ஸில் ஈடுபடுவதும் ஆபத்தானதாம். பயணக்களைப்பில் இருப்பவர்கள் கொஞ்சம் ரிலாக்ஸ் எடுத்துக்கொண்டு நன்றாக குளித்துவிட்டு பின்னர் தேவை எனில் உறவில் ஈடுபடலாம். இல்லையெனில் சந்தோசத்திற்காக ஆரம்பிக்கும் செயல் சங்கடத்தில் ஏன் மரணத்தில் கூட முடிந்துவிடும் என்று எச்சரிக்கின்றனர் நிபுணர்கள்.






==--==

Please Contact for Appointment

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

பிரபல பதிவுகள்