கேள்வி: டாக்டர் அவர்களுக்கு வணக்கம். 24 வயது பெண் நான், எனக்கு திருமணம்
நிச்சயமாகி உள்ளது. 2 மாதங்களில் திருமணம். முதலிரவை நினைத்தால் மிகவும் பயமாக உள்ளது.
அவருக்கும் இதுதான் முதல் அனுபவம் என்கிறார். இந்த பயத்தை போக்கவும் முக்கியமாக பின்பற்ற
வேண்டியவைகளையும் தயவு செய்து கூறுங்கள்
பதில்: முதலில் வாழ்த்துக்கள், முதலிரவு என்பது மறக்க முடியாத அனுபவம். வாழ்க்கையில்
அது முதன்முறையாக மட்டும் இருக்கும்போது எதிர்பார்ப்பு இன்னும் அதிகமாக இருக்கும்.
பின்வரும் தகவல்கள் தங்களுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும்.
Ø முதலிரவு நடக்கப் போகிற இடத்தைப் பற்றி உங்கள் வீட்டாருடன் பேசுங்கள்.
கல்யாணச் சத்திரத்திலா, ஹோட்டலிலா, வீட்டிலா என்று கேளுங்கள். புதியஇடம் உங்களுக்குப்
படபடப்பை ஏற்படுத்தும் என்று நீங்கள் உணர்ந்தால், நீங்கள் விரும்புகிற இடத்தை அவர்
களிடம் தெரிவியுங்கள்.
Ø மனித உடலைப் பற்றிய, செக்ஸ் பற்றிய, உடலுறவு பற்றிய புத்தகங்களைப் படியுங்கள்.
தேவைப்பட்டால் மருத்துவரிடமோ உளவியல் ஆலோசகரிடமோ திருமணத்திற்க்கு முந்தைய கவுன்சிலிங் மூலம் உங்கள் சந்தேகங்களுக்கு விளக்கம் கேட்கலாம்.
Ø முதலிரவு தினத்தன்று மாதவிடாய் வராமலிருக்க மருத்துவரைக் கலந்தாலோசியுங்கள்.
நீங்களாக மருத்துவம் செய்து கொள்ள வேண்டாம்.
Ø அன்றைய தினம் அதிகம் சாப்பிட வேண்டாம். அதிக மணமும், மசாலாவும் சேர்க்கப்பட்ட
உணவுகளையும் தவிர்த்து விடவும்.
Ø முடிந்தால் இன்னொரு முறை குளியுங்கள். குளிக்க நேரமில்லா விட்டாலும்,
பழைய மேக்கப்பை அகற்றி விட்டு, புதிதாக அதே சமயம் ரொம்பவும் மிதமாக மேக்கப் போட்டுக்
கொள்ளுங்கள்.
Ø உடலை உறுத்தாத உடையை அணிந்து கொள்ளுங்கள்.
Ø நகைகள் குறைவாகவே இருக் கட்டும். கூரிய முனைகளைக் கொண்டதும், கனமானதுமான
நகைகள் வேண்டாம்.
Ø காதுகளுக்குப் பின்புறம், மணிக்கட்டு போன்ற இடங்களில் மிதமான சென்ட்
தடவிக் கொள்ளுங்கள்.
Ø உடல் முழுவதும் மாயிச்சரைசிங் லோஷன் தடவிக் கொள்ளுங்கள்.
Ø கனமான, ஆடம்பரமான கூந்தல் அலங்காரத்தைத் தவிர்க்கவும்.
Ø படுக்கை விரிப்பை இரு முறை சரி பார்க்கவும். அலங்காரம் செய்யப்பட்ட
பூக்களிலிருந்து முட்களோ, பூச்சிகளோ உதிர்ந்திருக்க வாய்ப்புண்டு.
Ø முதல் ஸ்பரிசம் என்பது படபடப்பாகத்தான் இருக்கும். உங்கள் கணவரது செய்கைகள்
உங்களை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தினால் அதை அவரிடம்தெரிவியுங்கள்.
Ø முதலிரவன்றே உறவில் ஈடுபட்டுத் தானாக வேண்டும் என்றுஅவசியமில்லை. நீங்கள்
இருவரும் ஒருவருக்கொருவர் அறிமுகமில்லாதவர்கள் எனில், முதலில் உங்கள் விருப்பு, வெறுப்புகளைப்
பற்றிப் பேச அந்த இரவை உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.
Ø அடுத்தவர்களது அனாவசிய அனுபவங்களையும், அறிவுரைகளையும் கேட்டுக் குழப்பிக்
கொள்ளாதீர்கள். ஒவ்வொருவரது அனுபவம் ஒவ்வொருமாதிரியாக இருக்கும்.
Ø உணர்ச்சி வேகத்தில் உடனடியாக உறவில் ஈடுபடாமல் சிறிது நேரத்தை முன்
விளையாட்டுகளில் செலவழியுங்கள்.
Ø முதல் முறை உறவில் ஈடுபடும் பெண்களுக்கு வலி இருக்க லாம். அதைப் பற்றியே
நினைப்பது வலியை இன்னும் அதிகமாக்கத்தான் செய்யும்.
Ø பெண்ணுறுப்பில் வலியையும், வறட்சியையும் ஏற்ப்பட்டால் அதைக்குறைக்க
குறைக்க பெட்ரோலியம் ஜெல்லி அல்லது தேங்காய் எண்ணெய் உபயோகிக்கலாம்.
Ø உங்களுக்குள் உங்கள் முதலிரவு பற்றி ஒரு எதிர்பார்ப்பு இருக்கும். உங்களது
அனுபவம் அதை மிஞ்சவும் செய்யலாம். ஏமாற்றமாகவும் அமையலாம். போகப் போக அது சரியாகி விடும்.
Ø பெரும்பாலும் முதலிரவு திருமணம் ஆன அன்றே நடத்தப்பட்டு விடுகிறது. உங்களுக்கு
அதில் இஷ்டம் இல்லையென்றால், தாராளமாக - பக்குவமாக அதை உங்கள் கணவரிடம் எடுத்துக்கூறுங்கள்.
நிச்சயம் அவர் ஓ.கே. சொல்லிவிடுவார்.
Ø முதலிரவு மணமகன் வீட்டில் நடப்பதுதான் நல்லது. ஸ்டார் ஹோட்டல் என்றால்
உஷாராக இருங்கள். அங்கே உங்களுக்கு தெரியாமல் கேமரா இருக்கலாம்.
உங்களின்
வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக துவங்க வாழ்த்துக்கள்.
திருமணத்திற்கு முந்தைய உளவியல் ஆலோசனை பெற - For Pre Marital Counseling & சிகிச்சைக்கு தொடர்பு கொள்ளவும்
விவேகானந்தா உளவியல் / மனோதத்துவ மற்றும் ஹோமியோபதி சிறப்பு மருத்துவ ஆலோசனை
மையத்தில் இதைப்போன்ற பிரச்சினைகளுக்கு ஆலோசனை & சிகிச்சை பெற்று பலர் நல்ல பலனடைந்திருக்கிறார்கள். மருத்துவர் அவர்களை சென்னை, வேளச்சேரி விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் மையத்தில் சந்திக்கலாம். முன்பதிவு அவசியம். முன்பதிவிற்கு தொடர்புகொள்ளவும் 9786901830, மின் அஞ்சல்: consult.ur.dr@gmail.com
==--==