விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Saturday, March 15, 2014

குடும்ப வாழ்க்கையில் பிரச்சனை வராமலிருக்க சில யோசனைகள்



 குடும்ப நல உளவியல் ஆலோசனை மையம் மன நல ஆலோசகர் மருத்துவர் செந்தில் குமார்  Vivekanantha homeopathy clinic & psychological counseling center, Velachery, Chennai, panruti, cuddalore, Pondicherry, villupuram, Dr.senthil kumar best homeopathy specialist & famous psychologist in tamilnadu, india,


குடும்ப வாழ்க்கையில் பிரச்சனை வராமலிருக்க சில யோசனைகள்

v  பழைய காதலியின் நினைப்பு அடிக்கடி உங்களுக்கு வரலாம்.பல சுவையான சிரிப்பூட்டும் நிகழ்ச்சிகள் உங்களுக்கும் பழைய காதலிக்கும் இடையில் நடந்திருக்கலாம். ஆர்வக்கோளாரில் பந்தாவா மனைவியிடம் அதையெல்லாம் அவிழ்த்து விடக்கூடாது.

v  பழைய காதலியின் நினைவுப் பொக்கிஷங்களைப் பாதுகாக்காதீர்கள்.அந்தமாதிரி பொருள் ஏதாவது வீட்டிலிருந்தால் உடனே அழித்துவிடுங்கள்! புகைப்படம்,வீடியோ,சிடியிலிருந்து பல பிறந்தநாள் பரிசு வரை காலிபண்ணிவிடுங்க.

v  நம்ம நல்ல பேர் வாங்குவதற்காக நம் நண்பர்களின் குறைகளை மனைவியிடம் சொல்லக்கூடாது. “என் பிரண்டு ஒருத்தி இருந்தா.. அவ ரொம்ப மோசங்க!!” ன்னு ஒரு கொக்கி போடுவாங்க!

v  உங்களுடைய பலவீனங்களை அவர்களே தெரிந்து கொள்ளட்டும்.பலம் நிறைந்த மனிதனாக இருக்க முயலுங்கள்.தைரியம் என்பது பயத்தை மறைத்துக்கொள்வதுன்னு சொல்லுவாங்க...எல்லா பயத்தையும் சொல்லத்தேவையில்லை.

v  உங்கள் மனம் கவர்ந்த மங்கை உங்களை சொந்தக்காலில் நிற்பவர் அவரே தைரியமாக முடிவெடுப்பவர் என்று எண்ணுவார்கள். அதைத்தான் விரும்புவார்கள்..ஆனாலும் வயதில் மூத்தவர்களின், அப்பா,அம்மாவின் ஆலோசனை உதவி எப்பொழுதும் தேவை.

v  கிடைக்கும் எல்லாப் பணத்தையும் மனைவியிடம் கொடுத்துவிட்டுக் கையேந்தக்கூடாது. சம்பளம் இவ்வளவு என்று காதலிக்குத்தெரியலாம்.ஆனா செய்யுகின்ற எல்லா செலவுக்கும் சின்னப்பையன்போல் கணக்குச்சொல்லிக்கொண்டிருக்க வேண்டாம்.எவ்வளவு நண்பர்களுக்கு, அப்பா அம்மாவுக்கு, சுற்றுலாவுக்கு, செலவழிக்கிறீர்கள் என்று விலாவரியாக சொல்லவேண்டாம்!!!

v  புதிய உறவுகள் ஆரம்பிக்கும்போது திறந்த மனதுடன் ஒளிவு மறைவு இல்லாமல் எல்லாவற்றையும் சொல்வது நல்லது என்பார்கள். உண்மைதான்!! ஆனால் அதுவே பின்னாளில் பெரிய பிரச்சினை ஆகாமல் பார்த்துக்கொள்ளவேண்டும். ஏனெனில் ஆசை அறுபதுநாள் என்பது போல் ஆரம்பித்தில் எல்லாமே நல்லதாகத்தெரியும். பின்னாளில் பிரச்சினை என்று வரும்போது முன்னர் செய்த சிறு தவறையும் பெரிய விசயமாக்குவார்கள்!!!







==--==

Please Contact for Appointment

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

பிரபல பதிவுகள்