விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Thursday, February 13, 2014

செக்ஸில் அதிக நாட்டம் உள்ளது, இது இயல்பா? நான் அதிகம் செக்சில் ஈடுபடலாமா? பிற்காலத்தில் எந்த பிரச்சனையும் ஏற்படாதா?

sex-therapy specialist dr.senthil kumar vivekanantha clinic velachery, chennai, panruti, villupuram



கேள்வி: எனக்கு வயது 35, இரு குழந்தைகளின் அம்மா நான். எனக்கு செக்ஸில் அதிக நாட்டம் உள்ளது, இது இயல்பா? நான் அதிகம் செக்சில் ஈடுபடலாமா? பிற்காலத்தில் எந்த பிரச்சனையும் ஏற்படாதா?

பதில்: பெண்களுக்கான மிக முக்கியமான கால கட்டம் தொடங்குவது முப்பது வயதிற்கு மேல்தான். இருபதில் தொடங்கும் திருமண வாழ்க்கை குழந்தைகளை பெற்றெடுத்து அவர்களை வளர்த்து ஆளாக்கி பள்ளிக்கு அனுப்பும் வரைக்கும் பெண்களுக்கு எதைப்பற்றியும் நினைக்க தோன்றுவதில்லை.

ஓரளவிற்கு குழந்தைகள் வளர்ந்து பெரியவர்கள் ஆன பின்பே தங்களின் மீதே அக்கறை ஏற்படுகிறது. நன்கு உடுத்தவும், அழகுபடுத்திக் கொள்ளவும் ஆயத்தமாவது பெண்கள் முப்பது வயதிற்கு மேல்தான்.

ஹார்மோன்களின் வேகம் நடுத்தர வயதில் அதிகரிப்பதால் தாம்பத்திய வாழ்க்கையிலும் அதிக ஈடுபாடு ஏற்படுவது நடுத்தர வயதில்தான் என்று சர்வே முடிவு ஒன்று தெரிவிக்கின்றது.

நடுத்தர வயதில் ஆர்வம் நாற்பது வயதில்தான் தாம்பத்திய உறவில் அதிக ஆர்வம் ஏற்படுவதாக 81 சதவிகித பெண்கள் தெரிவித்துள்ளனர். ஆனால் 20 வயதுக்கு மேற்பட்டவர்களிடம் கேட்பட்ட கேள்விகளில் 63 சதவிகிதம் பேர் தாம்பத்ய உறவில் ஈடுபாடு காட்டுவதாக தெரிவித்துள்ளனர். இதற்கு காரணம் இளவயதில் காட்டும் வேகமும், நடுத்தர வயதில் ஏற்படும் விவேகமும்தான் என்கிறது அந்த ஆய்வு.

அந்த ஆய்வறிக்கையின் படி 20 வயதுகளில் இருக்கும் பெண்கள் மிகக்குறைவாகவே உச்சட்ட சிலிர்ப்பு (ஆர்கசம்) நிலையை அடைகின்றனர் என்றும் 40 வயதுகளில் இருக்கும் பெண்களே அதிகமாக அந்நிலையை அடைகின்றனர் என்றும் தெரிகிறது.    

ஹார்மோன்களின் வேகத்தால் இளமைக் காலத்தில் உறவுக்கு அழைப்பதில் ஆண் முன்நிற்கிறான். ஆனால் நடுவயதில் பெண்தான் ஆர்வம் மிகுந்தவளாக இருப்பாள்.

காரணம் ஆண் பெண் இருவர் உடலிலும் சுரக்கும் ஈஸ்ட்ரோஜன் மற்றும் டெஸ்டோஸ்டீரோன் திரவங்கள்தான். வயது கூடும்போது அவை மாற்றமடைகின்றன. ஆணுக்கு இவையிரண்டும் அளவில் குறையத் தொடங்கும். ஆனால் பெண் உடலில் டெஸ்டோஸ்டீரானின் குறைவை ஈஸ்ட்ரோஜன் ஈடுகட்டுகிறது. எனவேதான் ஆணை விடவும் பெண் நடுவயதில் அதிக ஆர்வம் கொண்டவளாக இருக்கிறாள்.


சத்தான ஆகாரம் உட்கொள்ளுதல், உடல் பயிற்சி மனதை கவலையின்றி வைத்துக்கொள்ளுதலும் இந்த வயதில் மிக அவசியம்.

உங்களின் தேவையை உங்களின் துணைவரால் நிறைவேற்ற முடியவில்லை என்றாலோ அல்லது இயலாமை இருந்தாலோ அவரை மருத்துவரிடம் அழைத்துசென்று மருத்துவ பரிசோதனை மேற்கொள்வது அவசியம். இதனால் நல்ல பலனை அடையலாம்.

அதிகமாக உடலுறவு கொள்வதால் எந்த பாதிப்பும் இல்லை,


சிகிச்சைக்கு தொடர்பு கொள்ளவும்
விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் இதைப்போன்ற பிரச்சினைகளுக்கு அலோசனைசிகிச்சை பெற்று பலர் நல்ல பலனடைந்திருக்கிறார்கள். மருத்துவரை சென்னை, வேளச்சேரி விவேகானந்தா ஹோமியோபதி கிளினிக் & உளவியல் ஆலோசனை மையத்தில் சந்திக்கலாம். முன்பதிவு அவசியம். முன்பதிவிற்கு தொடர்புகொள்ளவும் 9786901830, மின் அஞ்சல்: consult.ur.dr@gmail.com


மேலும் விபரங்களுக்கும் ஆலோசனைக்கும் சிகிச்சைக்கும் தொடர்பு கொள்க
விவேகானந்தா கிளினிக் ஆலோசனை மையங்கள் & தொடர்பு எண்கள்
சென்னை:- 9786901830
புதுச்சேரி:- 9865212055
பண்ருட்டி:- 9443054168
For appointment please Call us or Mail Us



==--==

 

Please Contact for Appointment

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

பிரபல பதிவுகள்