விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Wednesday, January 11, 2012

மலட்டு தன்மை உருவாக்கும் செல்போன்





வாஷிங்டன், உலகம் முழுவதும் 460 கோடி பேர் செல்போன் பயன்படுத்துகின்றனர். இதனால் ரூ. 150 லட்சம் கோடி வர்த்தகம் நடக்கிறது. செல்போனை பயன்படுத்தினால் புற்று நோய் வரும் என்று ஏற்கனவே விஞ்ஞானிகள் கூறி வந்தனர். ஆனால் இதை ஒரு தரப்பு விஞ்ஞானிகள் மறுத்தனர்.

இந்த நிலையில் அமெரிக்க நோபல் பரிசு விஞ்ஞானியும், விஷத்தன்மை ஆய்வு நிபுணருமான தேவ்ரா டேவில் செல்போன் மனித குலத்துக்கே பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளார். அவர் வெளியிட்டுள்ள புத்தகத்தில் இது சம்பந்தமாக அவர் எழுதியிருப்பதாவது:- செல்போன் பயன்பாடு உலக சுகாதாரத்துக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளது.

செல்போனில் ஒருவகை கதிரியக்கம் தொடர்ந்து வெளிபட்டு கொண்டே இருக்கும். இதனால் மூளையில் உள்ள செல்கள் பாதிப்படைந்து அதனால் புற்று நோய் ஏற்படும். இதை தவிர உடலில் உள்ள பல்வேறு உறுப்புகளின் இயக்கங்களும் பாதிக்கும். உடலில் உள்ள நுண்ணிய உறுப்புகள் அனைத்தும் பாதிக்கும். ஆண்களுக்கு மலட்டு தன்மை ஏற்படும்.

இது தொடர்பாக அமெரிக்கா, சீனா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட 7 நாடுகளில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் ஆண்களுக்கு மலட்டுதன்மை ஏற்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. “சுவிட்ச் ஆப்” செய்யப்படாத செல்போனை பேண்ட் பாக்கெட்டுக்குள் போட்டு இருப்பவர்களுக்கு விரைவிலேயே உயிரணு எண்ணிக்கை குறைவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலை தொடர்ந்தால் ஆரோக்கியமான எதிர்கால சந்ததிகளை நாம் உருவாக்க முடியாது. இந்த உண்மைகளை மறைக்க செல்போன் நிறுவனங்கள் ஏராளமான பணங்களை செலவிட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.













---

Please Contact for Appointment

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

பிரபல பதிவுகள்