விவேகானந்தா ஹோமியோ - சித்தா கிளினிக் & உளவியல் ஆலோசனை மையம் உங்களை அன்புடன் வரவேற்கிறது
நோய்நாடி நோய்முதல் நாடி அதுதணிக்கும்
வாய்நாடி வாய்ப்பச் செயல்

(நோய் இன்னதென்று ஆராய்ந்து, நோயின் காரணம் ஆராய்ந்து, அதைத் தணிக்கும் வழியையும் ஆராய்ந்து, உடலுக்கு பொருந்தும் படியாகச் செய்யவேண்டும்)

Thursday, May 19, 2011

முகத்தில் சுருக்கம் நீங்க


காய்கறி பழ வகைகளைத் தவறாமல் சாப்பிடுங்கள். இயற்கையான காய்கறி, பழ வகைகளில் உள்ள விட்டமின் மற்றும் சத்துக்கள் தோலில் சுருக்கம் ஏற்படுவதைத் தவிர்க்கக் கூடியவை.

வாரத்தில் ஒன்றிரண்டு தடவையாவது ஆரஞ்சு, கேரட் ஜூஸ் குடித்து வந்தால் சருமம் பளபளப்படையும்.

துவர்ப்பு சுவை இளமைக்குப் பாதுகாப்பு தரும். வாழைப்பழம், வாழைத்தண்டு, நெல்லிக்காய் போன்ற துவர்ப்பு சுவையுள்ள உணவை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வது நல்லது.

வெந்தயக் கீரையை பாசிப்பருப்பு, சீரகம் சேர்த்து வேகவைத்து மசித்து வாரத்தில் 2 அல்லது 3 தடவை சாப்பிட்டு வந்தால் உடல் குளுமையாக இருக்கும். சுருக்கம் எட்டியும் பார்க்காது.

நல்லெண்ணெய், பாதாம் எண்ணெய் இரண்டையும் சமமாக எடுத்து முகம் மற்றும் உடல் முழுவதும் தடவி, சிறிது ஊறவிட்டு கடலை மாவினால் தேய்த்துக் கழுவலாம்.

கறிவேப்பிலையிலுள்ள விட்டமின் ஏ இளமையான சருமத்தைத் தக்க வைத்துக் கொள்ள பெரிதும் உதவும். அடிக்கடி துவையல் செய்து சாப்பிடலாம்.




Please Contact for Appointment

Vivekanantha Clinic Consultation Champers at

Chennai:- 9786901830

Panruti:- 9443054168

Mail : consult.ur.dr@gmail.com, homoeokumar@gmail.com

பிரபல பதிவுகள்